முதல் வாசகம்
பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 4:20-25
- 20
கடவுளின் வாக்குறுதியைப் பற்றி ஐயப்படவே இல்லை; நம்பிக்கையில் அவர் மேலும் வலுப் பெற்றார்; கடவுளைப் பெருமைப்படுத்தினார்.
- 21
தாம் வாக்களித்ததைக் கடவுள் செய்ய வல்லவர் என்பதை அவர் உறுதியாய் அறிந்திருந்தார்.
- 22
ஆகவே"அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்."
- 23
"நீதியாகக் கருதினார்"என்று எழுதியுள்ளது அவரைமட்டும் குறிக்கவில்லை;
- 24
நம்மையும் குறிக்கின்றது; இறந்த நம் ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்தவர்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் நாமும் அவ்வாறே கடவுளுக்கு ஏற்புடையவர்கள் எனக் கருதப்படுவோம்.
- 25
நம் குற்றங்களுக்காகச் சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார்; நம்மைத் தமக்கு ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழச்செய்தார்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.