முதல் வாசகம்
1 சாமுவேல் 3:1-10, 19-20
- 1
சிறுவன் சாமுவேல் ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான். அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்தது. காட்சியும் அவ்வளவாக இல்லை.
- 2
அப்போது ஒரு நாள் ஏலி தம் உறைவிடத்தில் படுத்திருந்தார். கண் பார்வை மங்கிவிட்டதால் அவரால் பார்க்க முடியவில்லை.
- 3
கடவுளின் விளக்கு இன்னும் அணையவில்லை. கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தார்.
- 4
அப்போது ஆண்டவர்,"சாமுவேல்"என்று அழைத்தார். அதற்கு அவன்,"இதோ! அடியேன் என்று சொல்லி,
- 5
ஏலியிடம் ஓடி, இதோ! அடியேன் என்னை அழைத்தீர்களா? என்று கேட்டான். அதற்கு அவர்,"நான் அழைக்கவில்லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள் என்றார். அவனும் சென்றுபடுத்துக் கொண்டான்.
- 6
ஆண்டவர் மீண்டும்"சாமுவேல்"என்று அழைக்க, அவன் ஏலியிடம் சென்று, இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா? என்று கேட்டான். அவரோ, நான் அழைக்கவில்லை மகனே! சென்று படுத்துக்கொள்"என்றார்.
- 7
சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை. அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.
- 8
மூன்றாம் முறையாக ஆண்டவர்"சாமுவேல்"என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று"இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா? என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர்தாம் அழைத்தார் என்று ஏலி தெரிந்துகொண்டார்.
- 9
பின்பு ஏலி சாமுவேலை நோக்கி சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ"ஆண்டவரே பேசும் உம் அடியான் கேட்கிறேன்"என்று பதில் சொல்"என்றார். சாமுவேலும் தம் இடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டான்.
- 10
அப்போது ஆண்டவர் வந்து நின்று,"சாமுவேல்"சாமுவேல்"என்று முன்பு போல் அழைத்தார். அதற்கு சாமுவேல்,"பேசும், உம் அடியேன் கேட்கிறேன்"என்று மறு மொழி கூறினான்.
- 19
சாமுவேல் வளர்ந்தான்; ஆண்டவர் அவனோடு இருந்தார்; சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை.
- 20
சாமுவேல் ஆண்டவரின் இறைவாக்கினராக நியமிக்கப்பட்டு விட்டார் என்று தாண் முதல் பெயேர்செபா வரையிலும் அனைத்து இஸ்ரயேலரும் அறிந்து கொண்டனர்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.