முதல் வாசகம்
2 சாமுவேல் 6:12b-15, 17-19
- 12
ஆண்டவரின் பேழையை முன்னிட்டு ஓபோது ஏதோமின் வீட்டாருக்கும் அவனுக்குரிய அனைத்துக்கும் ஆண்டவர் ஆசி வழங்கினார் என்று அரசர் தாவீதுக்குச் சொல்லப்பட்டது. எனவே, தாவீது புறப்பட்டுச் சென்று கடவுளின் பேழையை ஓபோது ஏதோமின் இல்லத்திலிருந்து தாவீதின் நகருக்கு அக்களிப்போடு கொண்டு வந்தார்.
- 13
ஆண்டவரின் பேழையை ஏந்தியவர்கள் ஆறு அடிகள் எடுத்து வைத்தும் ஒரு காளையையும் ஒரு ஆட்டுக் கிடாவையையும் பலியிட்டார்.
- 14
நார்ப்பட்டால் நெய்யப்பட்ட ஏபோதை அணிந்து கொண்டு, தாவீது தம் முழுவலிமையோடு ஆண்டவர் முன்பாக நடமாடிக் கொண்டிருந்தார்.
- 15
தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரவாரத் தோடும் எக்காள முழக்கத்தோடும் ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள்.
- 17
ஆண்டவரின் பேழையைக் கொணர்ந்து அதற்கென நிறுவிய கூடாரத்தின் நடுவில் அதை வைத்தார்கள். தாவீது ஆண்டவர் முன்பு எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினார்.
- 18
எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தியப்பின் தாவீது படைகளின் ஆண்டவர் பெயரால் மக்களுக்கு ஆசி வழங்கினார்.
- 19
பிறகு தாவீது ஆண் முதல் பெண் வரை மக்கள் அனைவருக்கும் இஸ்ரயேல் கூட்டம் முழுவற்கும் ஆளுக்கொரு அப்பத்தையும், பொரித்த இறைச்சியையும், திராட்சைப்பழ அடையையும் கொடுத்தார். மக்கள் அனைவரும் தம் இல்லங்களுக்கு சென்றனர்.
வாசக எழுத்துக்குறி ஒரு வசனத்தின் பகுதியைக் குறிக்கும். இங்கே முழு வசனம் காட்டப்படுகிறது.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.