முதல் வாசகம்
2 சாமுவேல் 7:18-19, 24-29
- 18
பின் தாவீது ஆண்டவர் திருமுன் வந்து அமர்ந்து இவ்வாறு பேசினார்;"என் தலைவராம் ஆண்டவரே! இதுவரை நீர் என்னை வழி நடத்தி வந்தமைக்கு நான் யார்? என் குடும்பம் யாது?
- 19
இருப்பினும் என் தலைவராம், ஆண்டவரே உம் திருமுன் இது சிறிதே. உம் ஊழியனின் குடும்பத்தைப் பற்றிய எதிர்காலத்தைப் பற்றியும் நீர் பேசியுள்ளீர்! என் தலைவராம் ஆண்டவரே மனித வழக்கம் இது வல்லவே!
- 24
என்றும் உம் மக்களாகவே நிலைத்து இருக்குமாறு இஸ்ரயேலரை நீர் உமக்கு உரியவர் ஆக்கினீர்! ஆண்டவரே! நீரே அவர்களின் கடவுள் ஆனீர்!
- 25
ஆண்டவராகிய கடவுளே! உமது ஊழியனைப் பற்றியும் எனது குடும்பத்தைப் பற்றியும் நீர் தந்த உறுதி மொழியை என்றும் நிலைநாட்டும்! நீர் வாக்குறுதி அளித்தவாறே செய்யும்!
- 26
உமது பெயர் என்றும் மாட்சி பெறுவதாக! அப்பொழுது மாந்தர் படைகளின் ஆண்டவரே இஸ்ரயேலின் கடவுள் என்பர். உமது ஊழியன் தாவீதின் குடும்பமும் உம் திருமுன் நிலைத்திருக்கும்.
- 27
ஏனெனில் படைகளின் ஆண்டவரே! இஸ்ரயேலின் கடவுளே! நான் உனக்கு ஓர் இல்லம் எழுப்புவேன் என்று உமது ஊழியனுக்கு வெளிப்படுத்தியவர் நீரே! ஆகவே இவ்வாறு மன்றாட உம் ஊழியனுக்கு மனத்துணிவு ஏற்பட்டது.
- 28
தலைவராம் ஆண்டவரே! நீரே கடவுள்! உமது வார்த்தைகள் நம்பிக்கைக்கு உரியவை! இந்த நல்வாக்கை அடியேனுக்கு அருளியவர் நீரே!
- 29
உம் ஊழியனின் குடும்பம் என்றும் உம் திருமுன் இருக்குமாறு நீர் அருள் கூர்ந்து அதற்கு ஆசி வழங்கும்! தலைவராகிய நீர் உரைத்துள்ளீர்! உம் ஊழியன் குடும்பம் என்றும் உமது ஆசியைப் பெறுவதாக!
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.