முதல் வாசகம்
செக்கரியா 8:1-8
- 1
படைகளின் ஆண்டவரது வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது; படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே;
- 2
"சீயோன்மீதுள்ள அன்பு வெறியால் நான் கனன்று கொண்டிருக்கின்;; றேன்; அதன் மீதுள்ள அன்புவெறியால் நான் சினமுற்றிருக்கின்றேன்.
- 3
"ஆண்டவர் கூறுவது இதுவே; சீயோனுக்கு நான் திரும்பி வரப்போகிறேன்; எருசலேம் நடுவில் குடியிருக்கப் போகிறேன்; எருசலேம் ' உண்மையுள்ள நகர் ' என்றும், படைகளின் ஆண்டவரது மலை ' திருமலை ' என்றும் பெயர்பெற்று விளங்கும்.
- 4
படைகளிள் ஆண்டவர் கூறுவது இதுவே; எருசலேமின் தெருக்களில் கிழவரும் கிழவியரும் மீண்டும் அமர்ந்திருப்பார்கள்; வயது முதிர்ந்தவர்களானதால் ஒவ்வொருவரும் தம் கையில் கோல் வைத்திருப்பார்கள்;
- 5
நகரின் தெருக்களில் சிறுவரும் சிறுமியரும் நிறைந்திருப்பார்கள்; அவர்கள் அதன் தெருக்களில் விளையாடிக்கொண்டிருப்பார்கள்."
- 6
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே;"இம்மக்களில் எஞ்சியிருப்போரின் கண்களுக்கு இவையெல்லாம் அந்நாள்களில் விந்தையாய்த் தோன்றினாலும், என் கண்களுக்கு விந்தையாய்த் தோன்றுமோ?"என்கிறார் படைகளின் ஆண்டவர்.
- 7
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே;"இதோ, கீழ்த்திசை நாட்டினின்றும் மேற்றிசை நாட்டினின்றும் என் மக்களை விடுவிப்பேன்;
- 8
அவர்களை அழைத்துக் கொண்டு வருவேன்; அவர்கள் எருசலேமில் குடியிருப்பார்கள்; அவர்கள் என் மக்களாயிருப்பார்கள்; உண்மையிலும் நீதியிலும் நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்;"
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.