Fr. Arockia Ramesh
EN|தமிழ்Let's Connect ↗

DAILY MASS

Today’s
Readings

திங்கள், 4 அக்டோபர், 2027

பொதுக்காலம்

Memorial · Saint Francis of Assisi

← Previous day
Next day →

முதல் வாசகம்

Jonah 1:1-2:1-2, 11

இந்த குறிப்பை திறக்க முடியவில்லை.

பதிலுரைப் பாடல்

யோனா 2:3, 4, 5, 8

  1. 3

    நடுக் கடலின் ஆழத்திற்குள் என்னைத் தள்ளினீர்; தண்ணீர்ப் பெருக்கு என்னைச் சூழந்துகொண்டது. நீர் அனுப்பிய அலை திரை எல்லாம் என்மீது புரண்டு கடந்து சென்றன.

  2. 4

    அப்பொழுது நான்,"உமது முன்னிலையிலிருந்து புறம்பே தள்ளப்பட்டேன் இனி எவ்வாறு உமது கோவிலைப் பார்க்கப் போகிறேன்"என்று சொல்லிக்கொண்டேன்.

  3. 5

    மூச்சுத் திணறும்படி தண்ணீர் என்னை அழுத்திற்று; ஆழ்கடல் என்னைச் சூழ்ந்; தது; கடற்பாசி என் தலையைச் சுற்றிக் கொண்டது.

  4. 8

    பயனற்ற சிலைகளை வணங்குகின்றவர்கள் உம்மிடம் கொண்டிருந்த பற்றினைக் கைவிட்டார்கள்.

தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.

நற்செய்தி

லூக்கா நற்செய்தி 10:25-37

  1. 25

    திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன்,"போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?"என்று கேட்டார்.

  2. 26

    அதற்கு இயேசு,"திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?"என்று அவரிடம் கேட்டார்.

  3. 27

    அவர் மறுமொழியாக,"உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக"என்று எழுதியுள்ளது"என்றார்.

  4. 28

    இயேசு,"சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்"என்றார்.

  5. 29

    அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி,"எனக்கு அடுத்திருப்பவர் யார்?"என்று இயேசுவிடம் கேட்டார்.

  6. 30

    அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை;"ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள்.

  7. 31

    குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார்.

  8. 32

    அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.

  9. 33

    ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார்.

  10. 34

    அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார்.

  11. 35

    மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து,"இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்"என்றார்.

  12. 36

    "கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?"என்று இயேசு கேட்டார்.

  13. 37

    அதற்கு திருச்சட்ட அறிஞர்,"அவருக்கு இரக்கம் காட்டியவரே"என்றார். இயேசு,"நீரும் போய் அப்படியே செய்யும்"என்று கூறினார்.

தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.