தூய பிரான்சிஸ் கராச்சியோலா
“இயேசு அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே” என்றார். பின் அவரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றார். இன்று நாம் நினைவுகூரும் தூய பிரான்சிஸ் கராச்சியோலோ இத்தாலியில் 1563 ஆம் ஆண்டு, அக்டோபர் 13 ஆம் நாள் ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். பிரான்ஸிசின் குழந்தைப் பருவ வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகப் போய்க்கொண்டிருந்தது. இப்படி எல்லாமும் நன்றாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் அவருக்கு தொழுநோய் வர அவர் மனமுடைந்து போனார். அவருடைய நண்பர்கள், உறவுக்காரர்கள் அனைவரும் அவரை ஏளனமாகப் பேசினார்கள். அப்போது அவர் இயேசுவிடம், “இயேசுவே! நீர் மட்டும் எனக்கு வந்திருக்கின்ற இந்த தொழுநோயை என்னிடமிருந்து நீக்கிவிட்டால், நான் என்னுடைய வாழ்வை உமக்காகவே அர்ப்பணிப்பேன்” என்று உருக்கமாக மன்றாடினார். அவருடைய இந்த உருக்கமான மன்றாட்டு கேட்கப்பட்டது. ஆம், அவருடைய உடலிலிருந்த தொழுநோய் முற்றிலுமாக மறைந்தது. உடனே அவர் இயேசுவுக்கு வாக்குக் கொடுத்தது போன்று அவருக்காக, அவருடைய பணி செய்ய தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார்; நேப்பல்ஸ் நகருக்குச் சென்று அங்கே இறையியில் கற்று 1587 ஆம் ஆண்டு குருவாக அருட்பொழிவும் செய்யப்பட்டார். 1589 ஆம் ஆண்டு தூய ஜான் அகஸ்டின் அடோர்னோவுடன் சேர்ந்து, ‘Minor Clerks Regular’ என்ற சபையைத் தோற்றுவித்தார். இந்த சபையினுடைய பிரதான நோக்கம் ஜெபிப்பது மற்றும் செயலில் இறங்குவது ஆகும். பிரான்சிசும் அடோர்னோவும் சேர்ந்து பற்பல பணிகளைச் செய்தார்கள். குறிப்பாக சிறைச்சாலையில் இருந்த கைதிகளைச் சந்தித்து, அவர்களிடம் கிறிஸ்துவைக் குறித்து போதித்து மனமாற்றம் பெறவும் நல்மரணம் அடையவும் செய்தார்கள். மட்டுமல்லாமல் நோயாளிகளை மிகுந்த சிரத்தையோடு கவ