Fr. Arockia Ramesh
EN|தமிழ்Let's Connect ↗

SAINTS

Saint of
the Day

Monday, 8 June 2026

Ordinary Time

← Previous day
Next day →

புனிதர் மேடர்டஸ்

✠ புனிதர் மேடர்டஸ் ✠(St. Medardus) *ஆயர் மற்றும் ஒப்புரவாளர் : (Bishop and Confessor) *பிறப்பு : கி.பி. 456 சாலேன்சி, ஒய்ஸ், பிகார்டி, ஃபிரான்ஸ் (Salency, Oise, Picardy, France) *இறப்பு : ஜூன் 8, 525 நோயொன், ஒய்ஸ், பிகார்டி, ஃபிரான்ஸ் (Noyon, Oise, Picardy, France) *பாதுகாவல் : பருவநிலை, பல் வலிக்கெதிராக, திராட்சைத் தோட்டங்கள், குடிபானங்கள், கைதிகள், விவசாயிகள் மற்றும் மன நோயாளிகள். "புனிதர் மேடர்டஸ்" அல்லது "புனிதர் மேடர்ட்" (Saint Medardus or St Medard) என அறியப்படும் இப்புனிதர், வெர்மண்டோய்ஸ்" மறைமாவட்ட ஆயர் (Bishop of Vermandois) ஆவார். இவர், தமது மறைமாவட்ட ஆயரகத்தை "நோவோன்" (Noyon) நகருக்கு மாற்றினார். ஃபிரான்ஸ் நாட்டின் "பிகார்டியில்" (Picardy in France) பிறந்த இவரது தந்தையார் "ஃபிராங்கிஷ்" (Frankish) இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது பெயர் "நேக்டாரிடஸ்" (Nectaridus) ஆகும். "கல்லோ-ரோமன்" (Gallo-Roman) இனத்தைச் சேர்ந்த இவரது தாயாரின் பெயர் "புரோடோகியா" (Protagia) ஆகும். "ரோவென்" மறைமாவட்ட ஆயராக (Bishop of Rouen) இருந்த புனிதர் "கில்டர்ட்" (Saint Gildard) இவரது சகோதரர் ஆவார். இதில் அதிசயிக்கத்தக்க விடயம் என்னவென்றால், இச்சகோதரர்கள் இருவரும் பிறந்தது, ஆயராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டது, இவ்வுலக வாழ்வை விட்டு நித்திய வாழ்வுக்கு சென்றது யாவும் ஒன்றாகவேயாகும். சிறு வயதில், "வெர்மான்ட்" மற்றும் "டௌர்ணாய்" (Vermand and Tournai) ஆகிய இடங்களில் கல்வி கற்ற இவர், சீரழிவிற்கு வழி வகுக்கும் இவ்வுலக ஆர்வங்களை கவனமுடன் தவிர்த்து வந்தார். தமது சிறு வயதில், ஒரு நாள் புல்வெளியில் நடந்து கொண்டிருக்கும்போது, இடி மின்னலுடன் கூடிய கன மழை வந்தது. அப்போது ஒரு பருந்து இவர் மழையில் நனையாமல் இருக்க தனது சிறகுகளை அகல விரித்தபடி இவர் போகும் பாதையில் பறந்து வந்து இவரை மழையிலிருந்து காத்தது என கூறுவ

Today’s readings →