Fr. Arockia Ramesh
EN|தமிழ்Let's Connect ↗

SAINTS

Saint of
the Day

Monday, 15 June 2026

Ordinary Time

← Previous day
Next day →

தூய ஜெர்மைன் காசின்

ஜெர்மைன் காசின் இறந்து 43 ஆண்டுகள் கழித்து (1644 ஆம் ஆண்டு) அவருடைய கல்லறை தோண்டப்பட்டது. அப்போது அவரது உடல் அழியாமல் இருந்ததைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். எனவே ஜெர்மைன் காசினின் அழியா உடல் மக்கள் வணக்கம் செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. அவருடைய உடலுக்கு வணக்கம் செலுத்த வந்த ஒரு செல்வச் சீமாட்டி, “ஜெர்மைன் காசினே, நீர் மட்டும் என்னுடைய மார்பகப் புற்றுநோயைக் குணப்படுத்திவிட்டால், நான் உம்முடைய அழியா உடலுக்கு பொன்னாலான ஆடை செய்து வைப்பேன்” என்று வேண்டினார். அவருடைய வேண்டுதல் கேட்கப்பட்டது, அதனால் அவர் வேண்டிக்கொண்டது போன்றே ஜெர்மைன் காசினுக்கு பொன்னாலான ஆடை செய்து போர்த்தினார். ஜெர்மைன் காசின் இறைவனின் கையில் வல்லமையுள்ள கருவி, அவர் வழியாக நாம் இறைவனிடத்தில் ஜெபித்தோம் என்றால், நம்முடைய வேண்டுதல் கேட்கப்படும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. ஜெர்மைன் காசின், 1579 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள தூலூஸ் நகருக்கு அருகில் இருக்கும் பிப்ராக் என்னும் இடத்தில் இருந்த ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறக்கும்போதே ஒரு கை சிதைந்த நிலையில் பிறந்தார். அது மட்டுமல்லாமல் இவர் பிறந்த ஒருசில மாதங்களிலே இவருடைய தாயார் இறந்துபோனார். இதனால் இவரது தந்தை வேறொரு பெண்ணை மணந்துகொண்டார். அந்தப் பெண்மணி அதாவது ஜெர்மைன் காசினுடைய சிற்றன்னை இவரைப் பலவாறாகக் கொடுமைப்படுத்தினார். ஏற்கனவே கை சிதைந்த நிலையிலும் நோயினாலும் பீடிக்கப்பட்ட ஜெர்மைன் காசினை வீட்டுக்குள் சேர்த்தால், அவளிடமிருக்கின்ற நோய் எல்லாருக்கும் பரவும் என்று அஞ்சி, இவளது சிற்றன்னை இவளை வீட்டுக்குள் விடாமல், ஆட்டுப்பட்டியிலே தூங்கும்படி செய்தாள். இதனால் ஜெர்மைன் காசின் உடலளவிலும் உள்ளத்தளவிலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டார். ஜெர்மைன் காசினின் சிற்றன்னை அவரை படிக்க அனுப்பாமல் ஆடு மேய்க்க அனுப்பி வைத்தாள். தொடக்கத்தில் இதை

Today’s readings →