Fr. Arockia Ramesh
EN|தமிழ்Let's Connect ↗

SAINTS

Saint of
the Day

Tuesday, 16 June 2026

Ordinary Time

← Previous day
Next day →

✠ புனிதர் பென்னோ ✠(St. Benno of Meissen)

✠ஒப்புரவாளர் மற்றும் மெய்ஸ்ஸன் மறைமாவட்ட ஆயர் : (Confessor and Bishop of Meissen) ✠பிறப்பு : கி.பி. 1010 ஹில்ட்ஷெய்ம், ஸாக்சனி (Hildesheim, Duchy of Saxony) ✠இறப்பு : ஜூன் 16, 1106 மெய்ஸ்ஸன் (Meissen) ✠புனிதர் பட்டம் : மே 31, 1523 திருத்தந்தை ஆறாவது அட்ரியான் (Pope Adrian VI) ✠பாதுகாவல் : மீனவர்/ நெசவாளர் ✠நினைவுத் திருநாள் : ஜூன் 16 "ஹில்ட்ஷெய்ம்" (Hildesheim) நகரின் வசதி வாய்ப்புள்ள பிரபுக்கள் குடும்பத்தின் வாரிசாகப் பிறந்த புனிதர் பென்னோவின் வாழ்க்கை வரலாறு பற்றின தகவல்கள் சிறிதளவே உள்ளன. உள்ளூரிலுள்ள புனிதர் மைக்கேல் துறவு மடத்தில் (St. Michael's monastery) கல்வி கற்ற இவர், கோஸ்லர் அத்தியாய (Canon of the Goslar chapter) நியாயஸ்தராக இருந்தார். இவர், கி.பி. 1066ம் ஆண்டு, அரசன் நான்காம் ஹென்றியால் (King Henry IV) "மெய்ஸ்ஸன்" நகரின் ஆயரவை அதிகாரமுள்ளவராக (Episcopal see of Meissen) நியமிக்கப்பட்டார். கி.பி. 1073ம் ஆண்டு, பென்னோ சாக்ஸன் நகர கலகத்தின் (Saxon Rebellion) ஆதரவாளராக தோன்றினார். இருப்பினும், "லம்பெர்ட்" (Lambert of Hersfeld) எனும் வரலாற்றாசிரியரும் சமகால அதிகாரிகளும் தங்கள் பங்குக்கு அவர்மீது மேலும் சிறிதளவு சாட்டினார்கள். அரசன் நான்காம் ஹென்றி கி.பி. 1075ம் ஆண்டு, பென்னோவை நாடு கடத்தினான். ஆனால் மறு வருடமே அவரை திரும்பி வர அனுமதித்தான். பட்டம் மற்றும் பதவியளிக்கும் கடுமையான சர்ச்சைகளில் பென்னோ திருத்தந்தை ஏழாம் கிரகோரிக்கு (Pope Gregory VII) ஆதரவளித்தார். மேலும், கி.பி. 1077ம் ஆண்டு, அரசனுக்கு எதிரான "ரூடோல்ஃப்" (Election of Antiking Rudolf of Rheinfelden) என்பவரது தேர்தலில் பங்கெடுத்ததாக கூறப்பட்டது. எதிர் திருத்தந்தை மூன்றாம் கிளமென்ட்�டுக்கு (Antipope Clement III) எதிரானவர் என்ற காரணத்தால் "ரவென்னா" உயர்மறை மாவட்ட பேராயர் "கில்பர்ட்" (Archbishop Guibert of Rave

Today’s readings →