Fr. Arockia Ramesh
EN|தமிழ்Let's Connect ↗

SAINTS

Saint of
the Day

Thursday, 18 June 2026

Ordinary Time

← Previous day
Next day →

தூயவர்களான மாற்கு மற்றும் மார்செலியன்

தூயவர்களான மாற்கு மற்றும் மார்செலியன் (ஜூன் 18) “இக்காலத்தில் நாம் படுகின்ற துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப்போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றை என நான் எண்ணுகிறேன்” (உரோ 8:18) மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் உரோமையில் வாழ்ந்து வந்த தம்பதியர் ட்ராங்குளினஸ் மற்றும் மார்சியா. இவர்களுக்கு மாற்கு மற்றும் மார்செலியன் என்ற இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்கள் இருவரும் கிறிஸ்தவ விசுவாசத்தில் வேரூன்றி இருந்தார்கள். இவர்கள் இப்படி கிறிஸ்தவ விசுவாசத்தில் வேரூன்றி இருக்கின்ற செய்தி எப்படியோ அப்போது உரோமையின் அரசனாக இருந்த டையோகிளசியனுக்குத் தெரியவந்தது. உடனே அவன் இவர்கள் இருவரையும் பிடித்து சிறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யத் தொடங்கினான். தங்களுடைய இரு பிள்ளைகளுக்கும் இவ்வாறு நேர்ந்துவிட்டதை அறிந்த ட்ராங்குளினஸ் மற்றும் மார்சியா சிறையில் இருந்த தங்களுடைய இரு மகன்களிடம் சென்று, “எதற்காக நீங்கள் இருவரும் இப்படி கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள். பேசாமல் உரோமைக் கடவுளை வழிபட்டுவிட்டு உங்களுடைய உயிரைக் காத்துக்கொள்ளுங்கள்” என்றார்கள். அதற்கு மாற்கும் மார்செலியனும், “எங்களுடைய உயிர் போனாலும் பரவாயில்லை, நாங்கள் ஒருபோதும் கிறிஸ்துவின்மீது கொண்ட விசுவாசத்திலிருந்து விலகமாட்டோம்” என்று மிக உறுதியாகச் சொன்னார்கள். இதனால் அவர்களுடைய பெற்றோர் ஏமாற்றத்தோடும் அதே நேரத்தில் மிகுந்த வருத்தத்தோடும் சென்றார்கள். இதன்பிறகு இச்செய்தி உரோமை அரசாங்கத்தில் படைத்தளபதியாக செபஸ்தியாருடைய காதுகளைச் சென்றடைந்தது. அவர் கொடுங்கோலன் டயோக்ளசியனின் அச்சுறுத்தலுக்குப் பயந்து கிறிஸ்தவ விசுவாசத்திலிருந்து பின்வாங்கிய பலரை விசுவாசத்தில் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார். மாற்கும் மார்செயலியனும் இப்படி கிறிஸ்தவ விசுவாசத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதை அறிந்

Today’s readings →