✠புனிதர் அடால்பர்ட் ✠
✠புனிதர் அடால்பர்ட் ✠(St. Adalbert of Magdeburg) ✠மக்டேபர்க் பேராயர்/ விஸ்செம்பௌர்க் மடாதிபதி : (Archbishop of Magdeburg and Abbot of Wissembourg) ✠பிறப்பு : கி.பி. 910 அல்சாஸ் அல்லது லோர்ரெய்ன், ஃபிரான்ஸ் (Alsace or Lorraine, France) ✠இறப்பு : ஜூன் 20, 981 ஸ்செர்பேன், மெர்ஸ்பர்க்�ல் கியூசா, சாக்ஸனி-அன்ஹால்ட், ஜெர்மனி (Zscherben (contemporarily in (former) Geusa, in Merseburg, Saxony-Anhalt, Germany) ✠நினைவுத் திருவிழா : ஜூன் 20 புனிதர் அடால்பர்ட் (Adalbert of Magdeburg), மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பேசப்படும் மொழியான "ஸ்லாவிய" மொழி பேசும் மக்களின் அப்போஸ்தலரும் (Apostle of the Slavs), "மக்டேபர்க்" (Magdeburg) உயர்மறைமாவட்டத்தின் முதல் பேராயருமாவார் (Archbishop). இவர், இன்றைய கிழக்கு ஜெர்மனியின் (Eastern Germany) "எல்ப்" (Elbe) நதிக்கரையோரம் வாழ்ந்திருந்த "போலாபியன் சிலாவிய" (Polabian Slavs) இன ஆதிவாசி மக்களின் வெற்றிகரமான மறைப்பணியாளருமாவார். இவர், கி.பி. 910ம் ஆண்டு, ஃபிரான்ஸ் (France) நாட்டின் "அல்சாஸ் அல்லது லோர்ரெய்ன்" (Alsace or Lorraine) பிராந்தியத்தில் பிறந்தவர் ஆவார். ஜெர்மனியின் (Germany) "டிரையர்" (Trier) மாகாணத்திலுள்ள "தூய மேக்ஸிமினஸ்" (Benedictine Monastery of St. Maximinus) "பெனடிக்டைன்" துறவுமடத்தின் ஜெர்மன் துறவி (German monk) ஆவார். ரோமன் கத்தோலிக்க (Roman Catholic bishop) ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்ட இவர், கி.பி. 961ம் ஆண்டு, "கீவன் ரஸ்" (Kievan Rus) என்ற நாட்டுக்கு அனுப்பப்பட்டார். (தற்போதைய "பெலாரஸ்", "உக்ரைன்", மற்றும் "ரஷியா" (Belarus, Ukraine, and Russia) ஆகிய நாடுகளின் மக்கள், "கீவன் ரஸ்" (Kievan Rus) மக்களை தங்களது கலாச்சார முன்னோர்கள் என்கின்றனர்). "கீவன் ரஸ்" நாட்டின் இளவரசி "ஓல்கா" (Princess Olga of Kiev) "பேரரசர் முதலாம் பெரிய ஓட்டோ�விட