Fr. Arockia Ramesh
EN|தமிழ்Let's Connect ↗

SAINTS

Saint of
the Day

செவ்வாய், 23 ஜூன், 2026

பொதுக்காலம்

← Previous day
Next day →

✠ புனிதர் எத்தெல்டிரெடா ✠

✠அரசி/ இளவரசி/ மடாதிபதி : (Queen/ Princess/ Abbess) ✠பிறப்பு : கி.பி. 636 எக்ஸ்னிங், ஸஃபோல்க் (Exning, Suffolk) ✠இறப்பு : ஜூன் 23, 679 எலி, கேம்ப்ரிட்ஜ்ஷைர் (Ely, Cambridgeshire) ✠முக்கிய திருத்தலம் : புனிதர் எத்தெல்டிரெடா ஆலயம், எளி பிளேஸ், ஹோல்போர்ன், லண்டன்; முன்பு எளி ஆலயம் (தற்போது அழிந்துவிட்டது) (St Etheldreda's Church, Ely Place, Holborn, London; Originally Ely Cathedral (Now Destroyed) ✠பாதுகாவல் : தொண்டை நோய்கள் ✠நினைவுத் திருநாள் : ஜூன் 23 புனிதர் எத்தெல்டிரெடா, ஓர் அரசர் குடும்பத்தில் மகளாக பிறந்தவர். இவர் ஒரு "கிழக்கு ஆங்கிலியன் இளவரசியும்" (East Anglian Princess), "ஃபின்லாந்து" மற்றும் "நார்தும்ப்ரியன்" அரசியும் (Fenland and Northumbrian Queen), "எளி" என்ற இடத்திலுள்ள துறவு மடத்தின் (Abbess of Ely) மடாதிபதியும், "ஆங்கிலோ-சாக்சன்" (Anglo-Saxon Saint) புனிதருமாவார். "கிழக்கு ஆங்கில்ஸ்" (East Anglia) நாட்டின் அரசனான "அன்னா�வுக்கு" (Anna of East Anglia) பிறந்த நான்கு புனிதர்களான பெண்களில் ஒருவர்தான் எத்தெல்டிரெடா. இந்த சகோதரிகள் நால்வருமே இவ்வுலக சுக வாழ்வினை துறந்து துறவறம் பெற்றவர்களேயாவர். எத்தெல்டிரெடா, கி.பி. 652ம் ஆண்டு, தமது பதினாறாவது வயதிலேயே "தெற்கு ஜிர்வ்" (South Gyrwe) நாட்டின் இளவரசனான "டோன்ட்பெர்க்ட்" (Tondberct) என்பவரை முதல் திருமணம் செய்துகொண்டார். தாம் ஏற்கனவே தமது திருமணத்தின் முன்பே கன்னிமை காப்பதாக இறைவனிடம் எடுத்துக்கொண்ட பிரமாணிக்கத்தின்படி, தன் கணவன் தம்மை நிரந்தரமாக கன்னித்தன்மையுடன் ஏற்றுக்கொள்வதற்கு இணங்கச் செய்தார். திருமணமான மூன்றே வருடத்தில், கி.பி. 655ம் ஆண்டு, அவரது கணவர் "டோன்ட்பெர்க்ட்" (Tondberct) இறந்து போனார். தமது கணவர் தமக்கு பரிசாக தந்த "எலி" (Isle of Ely) எனும் வரலாற்றுப் பிராந்தியத்திற்குச் சென்றார். அதன்பின்னர் தொடர்ச்சிய

Today’s readings →