மொன்டே விர்ஜினே நகர தூய வில்லியம்
“தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்” (மாற் 3: 14-15). இன்று நாம் நினைவுகூரும் வில்லியம், இத்தாலியில் உள்ள வெர்செல்லியில் 1085 ஆம் ஆண்டு, ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். தொடக்கத்தில் இவருடைய வாழ்க்கையில் எல்லாருமே நன்றாகப் போய்கொண்டிருந்தது. இப்படிப்பட்ட தருணத்தில் இவருடைய பெற்றோர் இருவரும் இவரைவிட்டுப் பிரிந்துவிட, இவர் தன்னுடைய உறவினரின் பராமரிப்பிலே வளர்ந்து வந்தார். வில்லியம் சிறுவயது முதலிலே பக்தி நெறியில் சிறந்துவிளங்கி வந்தார். ஒருசமயம் இவர் ஸ்பெயின் நாட்டில் உள்ள தூய சந்தியாகப்பர் ஆலயத்திற்குத் திருப்பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் சென்றுவிட்டுத் திரும்பும்போது துறவியாக வாழவேண்டும் என்னும் ஆசைகொண்டார். அதனடிப்படையில் இவர் மொன்டே சொலிகோலி என்னும் இடத்தில் துறவற மடம் அமைத்து ஜெப தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இவர் அங்கிருக்கின்ற செய்தியைக் கேள்விப்பட்டு, நிறைய இளைஞர்கள் அவரைப் பார்ப்பதற்கும் அவரிடமிருந்து ஆலோசனை பெறுவதற்கும் வந்தார்கள். அவரும் அவர்களுக்கு நல்லவிதமாய் ஆலோசனைகளை வழங்கிவந்தார். ஒருசில நாட்கள் கழித்து, வில்லியம் அங்கு வந்த இளைஞர்களின் வேண்டுகோளின் பேரில் மொன்டே விர்ஜினேயில் துறவற மடம் அமைத்து, அங்கு ஜெப தவ வாழ்க்கையில் முழுமையாய் ஈடுபட்டு வந்தார். இவரிடத்தில் பயிற்சி பெற நிறைய இளைஞர்கள் வந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் இவர் நல்லதொரு வழிகாட்டியாய் செயல்பட்டு வந்தார். ஒருசில இளைஞர்கள் துறவுமடத்தில் ஒழுங்குமுறைகள் கடுமையாக இருக்கின்றன என்று சொல்லி, மடத்திலிருந்து வெளியேறினார்கள். அத்தகைய சூழ்நிலையிலும் இவர் மடத்தின் விதிமுறைகளைத் தளர்த்தாமல், முன்பு பின்பற்றப்பட்டு வந்த, விதிமுறைகளையே பின்பற்றிவந்தார். ஒருசில ஆண்ட