தூய விஜிலியஸ்
இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்” என்றார். (மாற் 16: 15-16) இன்று நாம் நினைவுகூரும் விஜிலியஸ் நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உரோமையில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவர் தன்னுடைய உயர் கல்வியை ஏதன்ஸ் நகரில் கற்றார். இவர் அங்கு படித்துக் கொண்டிருக்கும்போது மிகவும் எளிமையாக வாழ்ந்துவந்தார். ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தும் மிகவும் எளிமையாக இவர் வாழ்ந்தது பலருக்கும் எடுத்துக்காட்டாக இருந்தது. இவருடைய எடுத்துக்காட்டான வாழ்க்கையைப் பார்த்துவிட்டு பலரும் இவரைப் போன்று மிகவும் எளிமையாக வாழத் தொடங்கினார்கள். இவர் ஏதென்சில் கல்வியை முடித்துக்கொண்டு தன்னுடைய சொந்த ஊரான ட்ரென்ட்டிற்கு வந்தபோது இவரை ட்ரென்ட்டின் ஆயராக உயர்த்தினார்கள். ஆயர் பொறுப்பினை மனமுவந்து ஏற்றுக்கொண்ட இவர், பல ஆலயங்களைக் கட்டியெழுப்பினார். அது மட்டுமல்லாமல் அந்த ஆலயங்களில் மக்களை நிரப்ப, பலருக்கும் ஆண்டவருடைய நற்செய்தியை அறிவித்து, அவர்களைக் கிறிஸ்தவ மறையில் சேர்த்தார். இப்படி அவர் பல்வேறு பல்வேறு இடங்களுக்குச் சென்று, ஆண்டவருடைய நற்செய்தியை மக்களுக்கு வல்லமையோடு எடுத்துரைத்துக் கொண்டிருந்த தருணத்தில் இவர்மீது மலையிலிருந்து கல்விழுந்து அந்த இடத்திலேயே இறந்து போனார். இவருடைய இறப்புச் செய்தியைக் கேட்ட பலரும் கதறி அழுதார்கள். தூய விஜிலியசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம். தூய விஜிலியசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவருடைய எளிமையான வாழ்க்கைதான் நம்முடைய நினைவுக்கு வந்து போகின்றது. தூய விஜிலியஸ் செல்வம் படைத்தவராக