Fr. Arockia Ramesh
EN|தமிழ்Let's Connect ↗

SAINTS

Saint of
the Day

வெள்ளி, 19 பிப்ரவரி, 2027

தவக்காலம்

← Previous day
Next day →

✠ புனிதர் கான்ராட் ✠ (St. Conrad of Piacenza)

*ஃபிரான்சிஸ்கன் மூன்றாம் நிலை துறவி, யாத்திரீகர் : (Franciscan tertiary, pilgrim and hermit) *பிறப்பு : 1290 கலேண்டாஸ்கோ நகர், தூய ரோம பேரரசு (Commune of Calendasco, Holy Roman Empire) *இறப்பு : ஃபெப்ரவரி 19, 1351 நோடோ, சிசிலி அரசு (Noto, Kingdom of Sicily) *புனிதர் பட்டம் : ஜூன் 2, 1625 திருத்தந்தை எட்டாம் அர்பன் (Pope Urban VIII) *முக்கிய திருத்தலங்கள் : புனித நிக்கோலஸ் பேராலயம், நோடோ, சிராகஸ் பிராந்தியம், இத்தாலி (Cathedral of St. Nicholas, Noto, Province of Syracuse, Italy) *பாதுகாவல் : குடலிறக்க நோய்கள் குணமாதல், கலேண்டாஸ்கோ, நோடோ (Cure of Hernias, Calendasco and Noto) புனிதர் கான்ராட், செய்த பிழைக்கு மனம் வருந்தும் - வருத்தம் தெரிவிக்கும், "புனிதர் ஃபிரான்ஸிசின் மூன்றாம் நிலை துறவற சபையின் (Third Order of St. Francis) இத்தாலி நாட்டின் துறவியாவார். "கொர்ராடோ கான்ஃபலோனியேரி" (Corrado Confalonieri) எனும் இயற்பெயர் கொண்ட இவர், நகரின் முக்கிய பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். தம்மைப் போன்றே பிரபுக்கள் குடும்பமொன்றில் பிறந்த இளம் பெண்ணான "எஃப்ரோஸின்" (Ephrosyne) என்பவரை தமது இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டார். எல்லா இளைஞர்களைப் போலவே வாழ்க்கை இனிமையாக சென்றது. ஒருநாள் தமது வீட்டின் அதிகார வரம்புக்குள்ளேயே வழக்கமான பொழுதுபோக்கு அம்சமாக இவர் விளையாடும் வேட்டையின்போது, புதர்களினூடே இருக்கும் ஜீவராசிகள் வெளிவரும் என்பதற்காக, தமக்கு துணையாக வந்த பணியாளர்களிடம் பக்கத்திலுள்ள புதர்களுக்கு தீமூட்ட சொன்னார். எதிர்பாராவிதமாக காற்று திசை மாறி வீசவே, சிறு தீ பக்கத்திலுள்ள வயல்வெளிகளுக்கு பரவி, பின்னர் அருகாமையிலுள்ள காட்டில் பரவியது. அங்கிருந்து உடனேயே தப்பி ஓடினார் கொர்ராடோ. ஒன்றுமறியா அப்பாவியான விவசாயி ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குற்றத்தை ஒப்புக

Today’s readings →