Fr. Arockia Ramesh
EN|தமிழ்Let's Connect ↗

SAINTS

Saint of
the Day

சனி, 20 பிப்ரவரி, 2027

தவக்காலம்

← Previous day
Next day →

✠ புனிதர்கள் ஜசிந்தா மற்றும் ஃபிரான்சிஸ்கோ மார்ட்டோ ✠

✠ புனிதர்கள் ஜசிந்தா மற்றும் ஃபிரான்சிஸ்கோ மார்ட்டோ ✠ ✠ புனிதர்கள் ஜசிந்தா மற்றும் ஃபிரான்சிஸ்கோ மார்ட்டோ ✠ (Saints Jacinta and Francisco Marto) *பிறப்பு : ஜசிந்தா : மார்ச் 11, 1910 ஃபிரான்சிஸ்கோ மார்ட்டோ : ஜூன் 12, 1908 ஃபாத்திமா, போர்ச்சுகல் அரசு *இறப்பு : ஜசிந்தா : ஃபெப்ரவரி 20, 1920 ஃபிரான்சிஸ்கோ மார்ட்டோ : ஏப்ரல் 4, 1919 ஃபாத்திமா, போர்ச்சுகல் அரசு *முக்திபேறு பட்டம் : மே 13, 2000 ஜெபமாலை அன்னை பேராலயம், ஃபாத்திமா, போர்ச்சுகல் (Basilica of Our Lady of the Rosary, Fátima, Portugal) திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (Pope John Paul II) *புனிதர் பட்டம் : மே 13, 2017 ஜெபமாலை அன்னை பேராலயம், ஃபாத்திமா, போர்ச்சுகல் (Basilica of Our Lady of the Rosary, Fátima, Portugal) திருத்தந்தை ஃபிரான்சிஸ் (Pope Francis) *முக்கிய திருத்தலம் : ஜெபமாலை அன்னை பேராலயம், ஃபாத்திமா, போர்ச்சுகல். (Basilica of Our Lady of the Rosary, Fátima, Portugal) *பாதுகாவல் : உடல் நோய்கள் (Bodily ills), பிடிபட்டவர்கள் (Captives), தமது பக்திக்காக பரிகசிக்கப்பட்ட மக்கள் (People Ridiculed for their Piety), சிறைக்கைதிகள் (Prisoners), நோயாளிகள் (Sick People), நோய்களுக்கெதிராக (Against Sickness) அருளாளர் ஜசிந்தா, அருளாளர் ஃபிரான்சிஸ்கோ மார்ட்டோவின் சகோதரி ஆவார். இவர்களும், இவர்களது உறவினரான "லூசியா சாண்டோசும்" (Lúcia Santos) (1907-2005) போர்ச்சுகீசிய நாட்டின் அளிஜஸ்ட்ரேல் எனும் இடத்திற்கு சமீபமுள்ள ஃபாத்திமா எனும் ஊரைச் சேர்ந்தவர்களாவர். (Aljustrel near Fátima, Portugal). இவர்கள், ஒரு தேவதை தமக்கு 1916ல் மூன்றுமுறை காட்சியளித்ததாகவும், 1917ல், பலமுறை அன்னை மரியாள் தமக்கு காட்சியளித்ததாகவும் அறிவித்தனர். இதன் விளைவாக, ஃபாத்திமா (Fátima) என்ற ஊர், உலகின் மிகவும் பிரபலமான கிறிஸ்தவ புனித யாத்திரிக திருத்தலமாக மாறிப்போனது

Today’s readings →