தூய அனனியா (முதல் நூற்றாண்டு)
இவர் கி.பி. முதல் நூற்றாண்டில் தமஸ்கு நகரில் வாழ்ந்தார். கடவுளின் பார்வையில் பக்தியுள்ளவராகவும் அவர் வாழ்ந்த சமுதாயத்தில் மிகவும் மதிப்பு பெற்றவராகவும் விளங்கினார். விவிலியத்தில் இவர் பற்றிய குறிப்பு சவுல் பவுலாக மனமாற்றம் பெற்ற நிகழ்வில் அவருக்கு உதவி செய்பவராக குறிப்பிடப்படுகிறார் சவுல் தமஸ்கு நகர் நோக்கி கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதற்காக செல்கையில் இயேசுவால் தடுத்தாட்கொள்ளப்பட்டு பார்வை இழக்கிறார். இந்நிகழ்வு சவுலை மனம்மாற்றியது. தன்னை கடவுளுக்கு கையளித்தார். கடவுளுக்கு கையளித்தார். கடவுளின் திருவுளத்திற்கு காத்திருந்த இவர் தமஸ்கு நகரை நோக்கி வழிநடத்தப்பட்டார். அவ்வாறு காத்திருக்கையில் அனனியா எனும் மனிதர் அவர்மேல் கைகளை வைப்பார் அதன்மூலம் பார்வை பெநுவார் என காட்சியால் உயர்;த்தப்படுகிறார். இதற்கிடையில் கடவுள் அனனியாவிற்கு தோன்றி சவுல் தங்கியிருக்கும் இல்லத்திற்குப் போகப் பணிக்கின்றார். சவுல் தமஸ்கு நகருக்கு கிறிஸ்தவர்களை சிறையிலடைக்க வந்ததை அறிந்த அனனியா முதலில் பயந்தார். எனவே சவுலை சந்திக்க அவர் விரும்பவி;ல்லை. ஆனால் கடவுள் சவுலைப் பற்றிய தனது திட்டத்தை உறுதி செய்தவுடன் அன்னியா நம்பிக்கையோடு சவுலிடம் சென்றார். ஏனெனில் மூன்று நாட்களாக உணவு உண்ணாமலும் தண்ணீர் குடிக்காமலும் பார்வையற்ற வருமாய் இருந்த சவுலைத்தான் கடவுள் தன்னுடைய நற்செய்தியை அறிவிக்க தேர்ந்து கொண்டுள்ளார் என்பதை அறிந்தார். கடவுளிடன் வார்த்தையை மனதிலிருத்தி அனனியா சவுல் மீது தனது கையை வைத்து சகோதராட சவுலே என்று அழைத்தார். கடவுள் பணித்தவாறே அனனியா சவுலை தொட்டார் கடவுளின் வார்த்தையைக் போதித்தார். அதன்மூலம் சவுல் தன்னுடைய பார்வை திரும்ப கிடைக்கப் பெற்றார். அனனியா சவுலுக்கு திருமுழுக்கு அளித்தார். அந்த பொழுதே பவுல் தன்னுடைய பணியைத் தொடங்கினார். அதன்பின் அனனியா மறைபோதகராக பணியாற்ற எலியுத்தெரோபோலிஸ்(நுடநரவாநசழிழடளை