Fr. Arockia Ramesh
EN|தமிழ்Let's Connect ↗

SAINTS

Saint of
the Day

வெள்ளி, 26 பிப்ரவரி, 2027

தவக்காலம்

← Previous day
Next day →

✠ புனிதர் மரியா பெர்டில்லா பொஸ்கார்டின் ✠

✠ புனிதர் மரியா பெர்டில்லா பொஸ்கார்டின் ✠(St. Maria Bertilla Boscardin) *அருட்சகோதரி மற்றும் செவிலியர் : (Nun and Nurse) *பிறப்பு : அக்டோபர் 6, 1888 ப்ரேண்டோலா, வெனேட்டோ, இத்தாலி (Brendola, Veneto, Italy) *இறப்பு : அக்டோபர் 20, 1922 (வயது 34) ட்ரெவிசியோ, இத்தாலி (Treviso, Italy) *முக்திபேறு பட்டம் : ஜூன் 8, 1952 திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் (Pope Pius XII) *புனிதர் பட்டம் : மே 11, 1961 திருத்தந்தை இருபத்துமூன்றாம் ஜான் (Pope John XXIII) *முக்கிய திருத்தலங்கள் : விசென்ஸா, வெனேட்டோ, இத்தாலி (Vicenza, Veneto, Italy) "அன்னா ஃபிரான்செஸ்கா பொஸ்கார்டின்" (Anna Francesca Boscardin) என்ற இயற்பெயர் கொண்ட புனிதர் மரியா பெர்டில்லா பொஸ்கார்டின், ஒரு இத்தாலிய அருட்சகோதரியும், நோயுற்ற சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கும், முதலாம் உலகப் போரில் விமானத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் செய்யும் சேவையில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக கடமையை பக்தியுடன் செய்து காட்டிய செவிலியருமாவார். இத்தாலியின் "ப்ரேண்டோலா" (Brendola) என்னுமிடத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த இவரது தந்தையின் பெயர், "ஆன்ஜெலோ பொஸ்கார்டின்" (Angelo Boscardin) ஆகும். அன்னா ஃபிரான்செஸ்கா'வின் தந்தை ஒரு குணம்கெட்ட மனிதராக இருந்தார். அடிக்கடி மது அருந்துவது, பிறரில் பொறாமை கொள்வது மற்றும் அடிக்கடி சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவது போன்ற குணங்கள் கொண்டவராக இருந்தார். வீட்டிலும் விவசாய பூமியிலும் உதவிகள் செய்ய வேண்டியிருந்ததால் அன்னா ஃபிரான்செஸ்கா'வால் ஒழுங்காக தொடர்ந்து பள்ளிக்கு செல்ல இயலவில்லை. பள்ளிக்கு போகையில், அருகாமையிலுள்ள ஒரு வீட்டில் வீட்டு வேலைகள் செய்வார். தனிப்பட்ட திறமைகள் எதையும் அவரால் காண்பிக்க இயலவில்லை. மந்தமாக இருக்கும் அவரை புத்திசாலி என்றும் அயலார்கள் கருதவில்லை. ஆகையால் அடிக்கடி கிண்டலும் கேலியும் செய்து அவர

Today’s readings →