அருளாளர் அகஸ்துஸ் ஷப்டிலைன்
அருளாளர் அகஸ்துஸ் ஷப்டிலைன்(1814 - 1856) சீன வேதபோதகர் அகஸ்துஸ் பிரெஞ்சு நாட்டில் ஒரு விவசாயியின் ஒன்பதாவது மகனாகப் பிறந்தார். கடவுள் பணியை ஆற்றும் உறுதி கொண்ட இவர் பாரீஸ் வேத போதக சபையில் குருகுலத்தில் சேர்ந்தார். குருத்துவ அருட்பொழிவு பெற்ற பின் 1852 ம் ஆண்டு வரை சிறந்த பங்குப்பணியாளராக பணியாற்றினார். 1852ம் ஆண்டில் தான் சீனாவிற்கு வேதபோதராகப் புறப்பட்டார். காத்திருக்கும் அபாயங்களை நன்கு அறிந்து வைத்திருந்தார். ஏனெனில் சீனாவின் சமுக சமய வேறுபாடுகள் பிரதிநிதிகளாகப் பார்க்கும் சீனத்தலைவர்களின் மனநிலையும் இதில் அடங்கும். இவ்வுண்மை 19 ம் நூற்றாண்டில் வெட்ட வெளிச்சமாகத்n தென்பட்டது எவ்வாறெனில் சீனாவில் நடைபெற்ற ஓபியம் போர்களும் உள்நாட்டு குழப்பங்களும் பாக்ஸர் புரட்சிக்கு வித்திட்டன. இத்தகைய நிச்சயமில்லாத சூழ்நிலையிலும் தன்னுடைய பணியை மனமுவந்து ஏற்றார். நீண்ட கடினமான பயணத்திற்குப் பின் 1854ல் இறுதியில் குவாங் -சியை அடைந்தார். அயரா முயற்சியால் மொழியைக் கற்று மா என்று பெயர் பெற்றார். உள்நாட்டு இசுலாமியரோடு இணைந்து சதிதிட்டம் திட்டியதாக அரசு இவரை கைது செய்தது. வழக்கின் நியாயமற்ற தன்மையை உணர்ந்த அரச உயரதிகாரி இவரை நாட்டை விட்டு வெளியேற வற்புறுத்தி விடுவித்தார். சிறிது காலம் பொறுத்திருந்த பின் மீண்டும் இவர் தன்னுடைய பணியை மனமாற்றம் பெற்ற 300 பேருடன் நடத்தினார். பணியை நிறைவு செய்ய மனமில்லாமை அடுத்த சில மாதங்களுக்கு இவர் சிலரை திருமுழுக்கு அளித்து மனம் திருப்பினார். அதன் பின்னர் பதவியேற்ற அரச உயரதிகாரியி;ன் கிறிஸ்தவ எதிர்ப்பு குணத்தினால் இவருடைய பணி பெருவாரியாக தடைப்பட்டது. அவ்வதிகாரி இவரை நாட்டை விட்டு வெளியேற பணித்தார். அதனை மறுத்த இவரும் உடன் பயனிகளும் கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர். 1900ம் ஆண்டில் இவர் புனித நிலைக்கு உயர்த்தப்பட்டார். பிரான்சிஸ் பொசன்ட்ரி (தூய கபிரியேலி