Fr. Arockia Ramesh
EN|தமிழ்Let's Connect ↗

SAINTS

Saint of
the Day

திங்கள், 1 மார்ச், 2027

தவக்காலம்

← Previous day
Next day →

புனித ஆல்பின்

பிறந்த இடம் : பிரான்சு விழா நாள் : மார்ச் 1 வாழ்க்கை : ஆல்பின் பிரிட்டனிலில் தொண்மையும், நேர்மையாக வாழ்ந்த குடும்பத்தில் பிறந்தவர். குழந்தையாக இருக்கும்பொழுது மிகுந்த பக்தியுடையவர். தனது இளமைப்பருவத்தில் டிரிடிலான்ட் மடத்தில் பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக சேர்த்தார்கள். அல்பினுஸ் (தபவாழ்வை தேர்ந்து கொண்டு) மடத்தில் தபசு வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு எல்லா வேலைகளையும் தாழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். கிறித்துவுக்காக வாழவேண்டும் என்பதே அவரிடம் விளங்கிய ஆர்வம். எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ததற்காக பிற துறவிகளின் நன்மதிப்பை பெற்றவர். மேலும் இவருடைய செப வாழ்வு இவரை 35 வயதிலேயே மட அதிபராக உயர்த்தியது. டிரிடிலாண்டில் உள்ள மற்ற துறவிகள் இவருடைய அறிவாற்றலால் நிரப்பப்பட்டனர். 25 ஆண்டுகள் மட தலைவராகப் பணியாற்றிய பின்பு 529 ஆண்டில் ஆங்கர்ஸ்க்கு ஆயராக உயர்த்தப்பட்டார். ஆயராக இருந்து. ஆல்பின் மக்களின் நலனுக்காகவும், அவர்களை இவர் அரசர் சைல்ட்டிபர்ட்டோடு சேர்ந்து ஆர்லைன்ஸில் இரண்டு கூட்டம் கூட்டினார். அக்கூட்டமானது மேல்தட்டு மக்களின் (குடும்பங்களில்) தேவையில்லா திருமணத்தை தடைசெய்வதாக அமைந்தது. புறஇனத்து அத்துமீறலினால் இவரது மறைமாவட்ட மக்களின் உரிமைகள் கொள்ளையிடப்பட்டு அடிமைத்தனம் வந்தபோது தன்னுடைய உடமைகளை ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் வழங்கினார். புதுமை செய்பவர் : நிறைய புதுமைகள் புரிந்த புனிதர் ஆவார். மிகவும் கொடுமையாக நடத்தப்பட்ட ஒரு கைதியை விடுதலை செய்ய தனது செபத்தின் மூலம் ஒரு பகுதியை உடையச்செய்து அவரை விடுவித்தார். பிறகு அவர்களை மாற்றி கிறித்தவர்களாகவும் குடிமக்களாகவும் மாற்றினார். அவர் இறந்த பிறகு அவரது உடல் அந்த இடத்தின் மேல் வைக்கப்பட்டு திருப்பயணிகளின் இடமாக மாற்றப்பட்டது. செபம் : இனிய யேசுவே! சில நேரங்களில் நான் குடும்பம் மற்றும் வேலைகளில் ஆழ்ந்து மற்றும் நீர்தான் என் வாழ்வின் மையம் எ

Today’s readings →