Fr. Arockia Ramesh
EN|தமிழ்Let's Connect ↗

SAINTS

Saint of
the Day

Tuesday, 2 March 2027

Lent

← Previous day
Next day →

பியோமன் நகர் ஆக்னெஸ்

பிறப்பு 1207 (?), ப்ராக் Prag, செக் குடியரசு இறப்பு 2 மார்ச் 1282, ப்ராக் Prag, செக் குடியரசு புனிதர்பட்டம்: 12 நவம்பர் 1989 திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் இவர் பியோம் அரசர் முதலாம் ஒட்டோகர் என்பவரின் மகள். இவர் இளம் வயதிலிருக்கும்போதே 2 முறை திருமணம் செய்வதற்கு நிச்சயமானவர். முதல் முறை போலேஸ்லவ்ஸ் Boleslaus என்பவருடனும், இரண்டாம் முறை அரசர் 2 ஆம் பிரிட்ரிக் Friedrich II என்பவருக்கும் மண ஒப்பந்தமானவர். ஆனால் இரு முறையும் அரசியல் காரணமாக திருமணம் நடைபெறாமல் போனது. ஆக்னெஸ் தன் திருமணம் நடைபெறக்கூடாது என இறைவனிடம் இடைவிடாமல் வேண்டினார். அதன்படியே அவரின் விருப்பத்தை இறைவன் நிறைவேற்றினார். இதனால் ஆக்னெஸ் மிக மகிழ்ச்சியடைந்தார். இவர் புனித பிரான்சிஸ் அசிசியாரின் வாழ்வை முன் மாதிரியாகக் கொண்டு வாழ்ந்தார். புனித கிளாராவின் நட்பைப் பெற்று வாழ்ந்தார் என்று அவரே எழுதிய கடிதங்கள் விளக்குகின்றது. இவர் மீண்டும் அரசர் 2 ஆம் பிரட்ரிக் அல்லது அரசர் 2 ஆம் ஹென்றி இவர்களுள் ஒருவரை திருமணம் செய்யவேண்டிய கட்டாயச் சூழ்நிலை உண்டானது. இதனால் 1234 ஆம் ஆண்டு தனது அரசிக்குரிய கிரீடத்தை பெற்றார். இக்கிரீடத்தை பெற்றபோது தான் ஓர் கிளரீசியன் துறவி என்று தனக்குள் கூறிக்கொண்டு வார்த்தைப்பாடுகளைப்பெற்றார். இவர் தனது அரசிக்குரிய சொத்துக்கள், உடைமைகள் அனைத்தையும் கொண்டு, தேவாலயங்களுக்கும், துறவற இல்லங்களுக்கும் உதவினார். இவர் இறந்தபிறகு ஏராளமான புதுமைகளைச் செய்தார். செபம்: ஏழ்மையின் காதலனே எம் தலைவா! நீர் ஏழைகளின் மேல் அன்பு கொண்டு, ஏழைகளுக்காகவே இவ்வுலகில் மனுவுறு எடுத்தீர். எங்களிடம் பணம், பதவி, பட்டமென அனைத்து செல்வங்கள் இருக்கும்போதும் மன நிம்மதி இல்லாமல் வாடுகின்றோம். புனித ஆக்னெசின் துணையாலும், உதவியாலும் எம்மிடம் உள்ளவற்றை பிறரிடம் பகிர்ந்து, நிறைவுடன் வாழ செய்தருள வேண்டுமென்று தந்தையே உம்மை மன்றாடுகின்றோம

Today’s readings →