தூய குணகுந்தஸ்
உரோமையின் அரசியாக இருந்த குணகுந்தஸ், ஹெஸ்ஸே என்னும் பகுதியில் இருந்தபோது கடுமையாக நோயுற்றார். மக்களெல்லாம் அவர் இறந்துவிடுவார் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் குணகுந்தஸோ இறைவனிடத்தில் தளரா நம்பிக்கையுடன் ஜெபித்தார். “இறைவா நீர் மட்டும் எனக்கு உயிர்பிச்சை அளித்தால், நான் கபன்ஜெனின் பகுதியில் ஒரு துறவற மடத்தை கட்டி எழுப்புவேன்” என்று சொல்லி ஜெபித்துவந்தார். அரசியினுடைய ஜெபம் வீண்போகவில்லை. ஆம், ஆண்டவர் அவருக்கு நோயிலிருந்து விடுதலை அளித்து, பல ஆண்டுகள் வாழ்வதற்கான ஆசீர்வாதத்தைத் வழங்கினார். அரசியோ தான் சொன்னதற்கேற்ப கபன்ஜெனினினில் ஒரு துறவற மடத்தைக் கட்டி எழுப்பி, திருச்சபையின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றினார். குணகுந்தஸ், 999 ஆம் ஆண்டு லக்சம்பர்க்கில் பிறந்தார், இப்பகுதியானது பிரான்ஸ் மட்டும் ஜெர்மனி இவற்றின் எல்லைப் பகுதியில் உள்ளது. இவர் சிறுவயதிலே மிகுந்த பக்தியோடு வளர்ந்து வந்தார். வளர்ந்து பெரிய பெண்ணாக ஆனபின்பு, இவர் உரோமை மன்னர் ஹென்றி என்பவருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார். குணகுந்தஸ், ஹென்றியை மணந்துகொண்டபோதும் கற்பு நெறியில் மேலோங்கி வளர்ந்து வந்தார். “தனது உடலை ஆண்டவருக்கு அர்ப்பணித்துவிட்டேன். ஆதலால், தாம்பத்திய உறவு வேண்டாமே” என்று குணகுந்தஸ், கணவர் ஹென்றியிடம் சொன்னபோது அதனை அவர் மனமுவந்து ஏற்றுக்கொண்டார். மட்டுமல்லாமல் குணகுந்தஸ்மீது அவர் முன்பைவிட மிகுந்த அன்பைக் காட்டி வந்தார். இதனால் இரண்டுபேருமே முன்மாதிரியான தம்பதியராக வாழ்ந்து வந்தார்கள். ஒரு சமயம் மக்களில் சிலர் குணகுந்தசை சந்தேகப்பட்டார்கள். அவர் போகிற போக்கு சரியில்லை என்றெல்லாம் அவர்மீது பழி சுமத்தினார்கள். இதைக் கேள்விப்பட்ட குணகுந்தஸ் மிகவும் வருந்தினார். தான் கடவுளுக்குப் பயந்து மிகவும் கண்ணியமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும்போது மக்கள் இப்படி தன்மீது அபாண்டமாகப் பழிபோடுகிற