தூய சிலுவை யோவான் ஜோசப்
“மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” (மத் 20:28) இன்று நாம் நினைவுகூரும் சிலுவை யோவான் ஜோசப், இத்தாலியில் உள்ள இஸ்கியா என்னும் இடத்தில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் 1654 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் நாள் பிறந்தார். சிறுவயதிலே பக்தியிலும் நற்பண்புகளிலும் சிறந்து விளங்கிய இவர், தனது பதினாறு வயதில் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து, 1677 ஆம் ஆண்டு குருவானார். குருவானவராக மாறிய இவர் அதிகமான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டார். அதோடு நீண்டநேரம் இறைவனிடத்தில் ஜெபித்து வந்தார். இவருடைய ஜெபவாழ்க்கை இவரை மேலும் மேலும் உயர்த்தியது. எந்தளவுக்கு என்றால் தொடக்கத்தில் நவதுறவிகளுக்கு பொறுப்பாளராக இருந்த இவர், படிப்படியாக உயர்ந்து துறவற மடத்தின் தலைவரானார். துறவுவாழ்க்கையில் இயேசுவைப் போல வாழ முயற்சி செய்தார். பணிவிடை பெறுவதல்ல, பணிவிடை புரிவதே மேலானது என்றும் தன்னையே இறைவனுக்கு முழுமையாகக் கையளிப்பதும்தான் துறவற வாழ்வின் மேலான குறிக்கோள்கள் என்பதை உணர்ந்து, அதற்கேற்ப வாழ்ந்து வந்தார். இவருடைய கைகளால் நிறைய வல்ல செயல்கள் நடைபெற்றன. தீராத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரிடத்தில் வந்தபோது, இவர் தனது கைகளை வைத்து ஜெபித்தபோது அவர்கள் நோய் நீங்கி நலமடைந்தார்கள். இவர் வசதியான குடும்பத்திலிருந்து வந்தபோதுகூட எப்போதும் ஏழ்மையையே கடைப்பிடித்து வந்தார். ஏழ்மை, தாழ்ச்சி போன்ற புண்ணியங்களில் சிறந்துவிளங்கிய சிலுவை யோவான் ஜோசப் மரியன்னையிடம் மிகுந்த பக்திகொண்டு வாழ்ந்து வந்தார். தன்னுடைய வாழ்க்கையில் துன்பங்களும் இன்னல்களும் சூழ்ந்த நேரத்தில் மரியாளிடத்தில்தான் இவர் மிகுந்த பக்திகொண்டு ஜெபித்துவந்தார். மரியாவும் இவருக்கு மிகப்பெரிய ஆறுதலாய் இருந்து வந்தார். இப்படிப் பல்வேறு பணிகளைச் செய்துவந்த சிலுவை யோவான் ஜோசப் 1734