Fr. Arockia Ramesh
EN|தமிழ்Let's Connect ↗

SAINTS

Saint of
the Day

சனி, 6 மார்ச், 2027

தவக்காலம்

← Previous day
Next day →

✠ புனிதர் கொலெட் ✠

ஒரு சமயம் கொலேட் இருந்த பகுதியில் இருந்த ஒரு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த பெண்ணொருத்திக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை குறைமாதக் குழந்தையாக பிறந்து உடல் நலம் குன்றியிருந்தது. இதைப் பார்த்த அந்தக் குழந்தையின் தந்தை, குழந்தைக்குத் திருமுழுக்குக் கொடுத்தால் உடல் நலம் தேறிவிடும் என்ற நம்பிக்கையில், குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஆலயத்திற்கு ஓடினார். ஆலயத்திற்கு சென்று, அங்கிருந்த குருவானவரிடம் காட்டியபோது, அக்குழந்தை ஏற்கனவே இறந்திருந்தது குருவானவருக்குத் தெரியவந்தது. எனவே குருவானார், குழந்தையின் தந்தையிடம், “குழந்தை ஏற்கனவே இறந்துபோய்விட்டது. இறந்த குழந்தைக்கு திருமுழுக்குக் கொடுப்பது நல்லதல்ல” என்றார். இதைக் கேட்டு அந்த குழந்தை தந்தை கதறி அழுதார். அவருடைய அழுகையைப் பார்த்து மனமுருகிப் போன குருவானவர் அவரிடம், “பக்கத்தில் கொலேட் என்ற பெண் துறவி ஒருவர் இருக்கின்றார். உன்னுடைய குழந்தையை அந்தத் துறவியிடம் நீ எடுத்துக்கொண்டு போனால், கட்டாயம் அவர் உன்னுடைய குழந்தையை உயிர்பித்துத் தருவார்” என்றார். குருவானார் சொன்னதை நம்பி, அவர் தன்னுடைய குழந்தையைத் தூக்கிக்கொண்டு கொலேடிடம் ஓடினார். அவரைச் சென்று சந்தித்து நடந்தவற்றையெல்லாம் விளக்கிச் சொன்னார். உடனே அவர் தான் அணிந்திருந்த மேலாடையை (Habit) எடுத்து, அந்தக் குழந்தையின் மீது போர்த்தி, அந்தக் குழந்தைக்காக இறைவனிடம் ஜெபித்தார். பின்னர் அவர் அந்த மனிதரிடம், “உன்னுடைய குழந்தை நிச்சயம் பிழைத்துக்கொள்ளும். அதனால் இக்குழந்தையை எடுத்துக்கொண்டு போய் குருவானவரிடம் காட்டி, திருமுழுக்குக் கொடு” என்றார். கொலேட் சொன்ன வார்த்தைகளை நம்பி, அந்த மனிதர் குழந்தையைத் தூக்கிக்கொண்டு குருவானவரிடத்தில் சென்றார். ஆச்சரியம் என்னவென்றால், குழந்தை போகிற வழியிலே பிழைத்துக்கொண்டது. உயிர்பிழைத்த அந்தக் குழந்தையை குருவானவரிடத்தில் காட்டி, திருமுழுக்குக் கொடுத்தார்

Today’s readings →