தூய யூலோசியஸ்
“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்” (யோவா 12: 24) யூலோசியஸ், ஸ்பெயின் நாட்டில் உள்ள கோர்டோவா என்னும் இடத்தில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவர் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்திருக்கலாம் என்று சொல்வர். தொடக்கக் கல்வியை யூலோசியஸ், சோய்லஸ் என்பவரிடத்தில் கற்றார். இந்த சோய்லஸ் பின்னாளில் மறைசாட்சியாக உயிர்துறந்தார் என்பது வரலாறு. கல்வியை தகுந்தமுறையில் கற்றுக்கொண்ட பிறகு யூலோசியஸ் திருமறையைப் போதிக்கும் பள்ளிக்கூடத்திற்கு தலைமைப் பொறுப்பை ஏற்றார். தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும் யூலோசியஸ் எப்போதும் தாழ்ச்சியோடும் பொறுமையோடும் உண்மையான அன்போடும் வாழ்ந்து வந்தார். அதனால் எல்லாரும் அவர்மீது நன்மதிப்பு கொண்டிருந்தார்கள். யூலோசியஸ் எப்போதும் விவிலிய அறிவில் சிறந்து விளங்கி வந்தார். பல நேரங்களில் அவர் விவிலியத்தை வாசிக்கும்போது இறைவனின் வல்லமையை உணர்ந்தார். 850 - களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வேதகலாபனை நடைபெறத் தொடங்கியது. நிறையக் கிறிஸ்தவர்கள் மூர் இனத்தவரால் சிறைபிடிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார்கள். அந்நேரத்தில் யூலோசியசும் சிறைபிடிக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்தபோது ‘கிறிஸ்தவ விசுவாசத்தில்’ நம்பிக்கை தளர்வுற்று இருந்த நிறைய கிறிஸ்தவர்களை நம்பிக்கையில் தேற்றினார். அப்படி அவரால் நம்பிக்கையில் தேற்றப்பட்ட ப்ளோராவும் மரியாவும் 851 ஆம் ஆண்டு கிறிஸ்துவுக்காக தங்களுடைய இன்னுயிரைத் தந்தார்கள். அவர்களைப் போன்று இன்னும் பலர் ஆண்டவர் இயேசுவுக்காக மறைசாட்சிகளானார்கள். யூலோசியஸ், சிறையில் இருந்துகொண்டே ‘Memorial of the Saints’ என்னும் நூலை எழுதினார். இந்நூல் விசுவாசத்திற்காக வேதசாட்சிகளாக உயிர்துறந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி எடுத்துக்கூறுவதாக இருந்தது. இந்நூலின்