Fr. Arockia Ramesh
EN|தமிழ்Let's Connect ↗

SAINTS

Saint of
the Day

Saturday, 13 March 2027

Lent

← Previous day
Next day →

புனித யூஃப்ராசியா

மகளே, துணிவோடிரு: உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று (மத் 9:22) கொண்ஸ்தாந்தினோபிளில் 380-ஆம் ஆண்டு பிறந்தவர் பெண் நிலவு யூஃப்ராசியா. இவருடைய தந்தை பெயர் அன்டிகோனஸ். இவர், பேரரசர் தியோடோசியசின் உறவினர். அதனால் நகர ஆளுநராக இருந்தார். அரசவை உறுப்பினராகவும் இருந்தார். யூஃப்ராசியா சிறுமியாக இருந்தNபுhதே தந்தை இறந்தார். அரசன் எவ்வளவோ வற்புறுத்தியும் அரச மரியாதையுடன் அங்கு வாழ யூஃப்ராசியாவின் தாய்க்கு விருப்பம் இல்லை. மகளை அழைத்துக்கொண்டு தங்களுக்கொன்று எகிப்தில் இருந்த ஒரு தோட்டத்திற்குச் சென்றார். துறவிகள் போலவே தன்னொடுக்கத்திலும், செபத்திலும் வாழ்க்கை நடத்தினார். இவர்கள் தங்கி இருந்த தோட்ட வீட்டிற்கு அருகிலேயே துறவு மடம் ஒன்று இருந்தது. அவ்வப்போது அங்கு செல்லும் தாய் தன் மகளையும் அங்கு அழைத்துச் செல்வது வழக்கம். துறவு மடத்தின் ஒழுங்குகளும், செபங்களும் யூஃப்ராசியாவிற்கு பிடித்துப்போனது. யூஃப்ராசியாவிற்கு ஏழு வயது நடந்தபோதுதான் அங்கேயே தங்கத் தாயிடம் விருப்பம் தெரிவித்தார். தாய் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார். வாரி அணைத்து முத்தமிட்டு தன் மகளை மடத்திலே சேர்த்துவிட்டாள். மகளை விட்டு விட்டுத் தனிமையில் இறைவனைத் துதித்த தாய் இறந்தார். இறந்த செய்தி கேள்விப்பட்ட பேரரசர் தியோடோசியன், யூஃப்ராசியா தனியாகத் தவிப்பாளே என நினைத்து அவளை அழைத்துவர ஆளனுப்பினார். நல்ல குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு மணமுடிக்க யூஃப்ராசியா சிறுமியாக இருந்தபோதே அரசர் முடிவு செய்திருந்தார். எனவே அவர் திருமண ஏற்பாட்டையும் ஆரம்பித்தார். “பேரரசரின் முடிவுக்கு தான் உடன்பட முடியாதபடிக்கு இறைவன் என்னைத் தேர்ந்துள்ளார்” என்று கடிதம் எழுதிய யூஃப்ராசியா தனது சொத்துக்களை விற்று ஏழைகளுக்குக் கொடுக்கும்படியாகவும், தனது தோட்டத்தில் உள்ள அடிமைகளுக்கு விடுதலை கொடுக்கும்படியாகவும் கடிதம் எழுதினார். மனதார சம்மதம் தெரிவித்த பே

Today’s readings →