✠ புனிதர் கிளெமன்ட் மேரி ஹொஃபௌவர் ✠
*மறைபணியாளர், மத குரு, வியன்னாவின் அப்போஸ்தலர்: (Religious, Priest and Apostle of Vienna) *பிறப்பு : டிசம்பர் 26, 1751 டப்விட்ஸ், ஸ்நோஜ்மோ மாவட்டம், போஹெமியா அரசு, ஹப்ஸ்பர்க் பேரரசு *இறப்பு : மார்ச் 15, 1820 வியன்னா, ஆஸ்டிரியன் பேரரசு (Vienna, Austrian Empire) *முக்திபேறு பட்டம் : ஜனவரி 29, 1888 திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII) *புனிதர் பட்டம் : மே 20, 1909 திருத்தந்தை பத்தாம் பயஸ் (Pope Pius X) *பாதுகாவல் : வியன்னா, ஆஸ்திரியா (Vienna, Austria) புனிதர் கிளெமன்ட் மேரி ஹொஃபௌவர், ஒரு "மொராவியன் துறவியும்" (Moravian Hermit) பின்னர், "மீட்பர் சபையின்" (Redemptorist Congregation) மத குருவும் ஆவார். இவர் தமது சபையை இத்தாலியின் "ஆல்ப்ஸ்" மலைகளின் வடக்கே நிறுவினார். ஐரோப்பாவின் கொந்தளிப்பான வறுமையின் கோரப்பிடியில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியான காலகட்டத்தில், இவர் தமது வாழ்நாள் முழுவதையும் ஏழைகளின் சேவையில் அர்ப்பணித்தார். போலிஷ் (Polish people) மக்களின் சேவையில் தம்மை ஈடுபடுத்திய இவர், அங்கிருந்து ஆஸ்திரியா நாட்டுக்கு நாடுகடத்தப்படும்வரை போலிஷ் மக்களுக்கு சேவை புரிந்தார். "வியன்னாவின்" (Vienna) இணை பாதுகாவலரான இவர், தமது அளப்பற்ற தன்னலமற்ற சேவைகளுக்காக "வியன்னாவின் அப்போஸ்தலர்" (Apostle of Vienna) என்று அழைக்கப்பட்டார். "ஜோஹன்னஸ் ஹொஃபௌவர்" (Johannes Hofbauer) எனும் இயற்பெயர் கொண்ட இவர், புனிதர் ஸ்தேவானின் (Saint Stephen) நினைவுத் திருநாளான 1751ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 26ம் நாளன்றும், "மரியா ஸ்டீர்" (Maria Steer) மற்றும் "பவுல் ஹொஃபௌவர்" (Paul Hofbauer) ஆகிய பெற்றோருக்கு பிறந்த பன்னிரண்டு குழந்தைகளில் ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார். கிளமென்ட்டுக்கு ஆறு வயதாகையில் இவரது தந்தை மரித்தார். ஏழை விதவைத் தாயார் இவர்களை வளர்க்க கஷ்டப்பட்டார். குரு மாணவராக சேர அல்லது மத சபையொன்