Fr. Arockia Ramesh
EN|தமிழ்Let's Connect ↗

SAINTS

Saint of
the Day

Saturday, 20 March 2027

Lent

← Previous day
Next day →

தூய கத்பர்ட்

“என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” (மத் 16: 24) இன்று நாம் நினைவுகூரும் கத்பர்ட், இங்கிலாந்து நாட்டில் உள்ள நார்த்தம்பிரியா என்னும் இடத்தில் 635 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் சிறுவயதிலே தன்னுடைய பெற்றோரை இழந்ததால், கென்ஸ்வித் என்பவருடைய பாதுகாப்பில்தான் வளர்ந்து வந்தார். கத்பர்ட், சிறுவயதில் பள்ளிக்குச் செல்லவில்லை, மாறாக ஆடுகளை ஓட்டிக்கொண்டு மெல்ரோஸ் என்ற மலைச்சரிவில் மேய்க்கச் சென்றார். அப்போது அங்கிருந்த ஆசிர்வாதப்பர் துறவற மடத்தைக் கண்டு, ஒருநாள் தானும் ஒரு துறவியாகவேண்டும் என்ற எண்ணம் கொண்டார். இதற்கிடையில் வயது வந்த இளைஞர்கள் யாவரும் நாட்டிற்காக இராணுவத்தில் சேர்ந்து போராடவேண்டும் என்றொரு நிலை உருவானது. எனவே, கத்பர்ட் இராணுவத்தில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் இராணுவத்தில் பணிபுரிந்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டுமாக தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பி வந்து, ஏற்கனவே செய்து வந்த வேலையைச் செய்து வந்தார். இச்சமயத்தில் ஒருநாள் தூய ஆர்டன் என்பவருடைய ஆன்மாவை வானதூதர்கள் தூக்கிக்கொண்டு போகும் காட்சியைக் கண்டார். இதனைக் கண்ட கத்பர்ட், தன்னுடைய ஆன்மாவையும் இவ்வுலக மாசுகளிலிருந்து காப்பாற்ற வேண்டும், அதற்கு நாம் துறவற வாழ்க்கையை மேற்கொள்வதே சரியானது என்று முடிவுசெய்து மெல்ரோஸ் மலைச்சரிவில் இருந்த தூய ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து துறவியானார். கத்பர்ட், சிறுவயதில் பள்ளிக்குச் செல்லவில்லை என்றாலும் துறவற மடத்தில் சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடங்களை மிக எளிதாகக் கற்று, கல்வியில் சிறந்து விளங்கினார். இப்படி கத்பர்ட்டின் வாழ்க்கை மகிழ்ச்சியாய் போய்கொண்டிருந்த தருணத்தில், அவர் இருந்த துறவற மடத்தில் நிறையப் பேர் குறிப்பாக தலைமைப் பொறுப்பில் இருந்த தூய பாசில் உட்பட தொற்றுநோய் தாக்கி இறந்துபோனார்கள். அதனால் கத்பர்ட் தலைமைப

Today’s readings →